நரைமுடி அதிகமா இருக்கா..? இனி ஹேர் டைக்கு GoodBye சொல்லுங்க… இந்த 3 பொருள் இருந்தாலே போதும் முடி கருகருன்னு இருக்கும்..!!

By Soundarya on ஆடி 8, 2025

Spread the love

ஆரோக்கியம், மற்ற உணவு தேர்வு, வாழ்க்கை முறை மாற்றங்கள் உட்பட பல காரணங்களால் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. கூந்தல்  நரையாக  மாறினால் அதை மீண்டும் கருப்பாக்குவதற்கு ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். ஆனால் செயற்கை நிறம் நீண்ட கால தீர்வை  கொடுக்காது. இதற்கு மாற்று சிறந்த வழிகள் உள்ளது. அதாவது கொஞ்சம் கற்பூரவள்ளி இலைகளை இரும்பு பாத்திரத்தில் எடுத்து கைகளால் பிசைந்து சாறு முழுவதும் வெளியேறச் செய்ய வேண்டும். பிறகு இலைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும்.

இரண்டு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம், வெந்தயத்தை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதை ஊற வைத்திருக்கும் கற்பூரவள்ளி இலைகளோடு சேர்த்து அந்த சாரை மட்டும் வடிகட்டி எடுத்து அவுரி பொடியோடு  சேர்த்து கலக்க வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் காற்று போகாமல் மூடி வைக்க வேண்டும். கடைசியாக இந்த ஹேர் பேக்கை தலையில் தேய்த்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு கழுவ வேண்டும் . இது தொடர்ந்து செய்து வந்தால் நரை முடிகள் கருப்பாக மாறும்.