தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சிறுத்தை சிவாவின் தம்பிதான் பாலா. இவர் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் மற்றும் கலிங்கா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் அஜித் உடன் வீரம் திரைப்படத்தில் நடித்த பிறகுதான் இவருக்கு என்று தனி ஒரு அடையாளம் கிடைத்தது. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிறகு விவாகரத்து பெற்ற பிரிந்துவிட்டார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருடனும் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

ஆனால் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாலா தனது உறவுக்கார பெண் கோகிலா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் கோகிலாவுக்கு கேரளாவில் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் அடிக்கடி வாங்கும் அவருக்கு தற்போது 25 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அது தொடர்பாக பாலா கோகிலாவுடன் இணைந்து வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் இந்த தொகையை வைத்து நல்லது செய்ய வேண்டும் அதிர்ஷ்டம் வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பாலாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
View this post on Instagram
