மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மையா? இதோ முழு விவரம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 12, 2025

Spread the love

இணையதளத்தில் நரேந்திர மோடி இலவச ரீசார்ஜ் என தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உண்மையா? பொய்யா? என்று விரிவாக பார்க்கலாம். நரேந்திர மோடி இலவச ரீசார்ஜ் திட்டம் என பரவி வரும் தகவல் போலியானவை என்று பத்திரிக்கை தகவல் பணியகம் தெரிவித்துள்ளது. சில யூடியூப் சேனல்களில் ஒரு வருட இலவச ரீசார்ஜ் என பலரும் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இது உண்மை இல்லை என்றும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பத்திரிக்கை தகவல் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற ஸ்கீம் மற்றும் துல்லியமான விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள myscheme.gov.in என்ற வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது போன்ற போலியான தகவல்கள் பரவினால் +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அல்லது factchcck@pib.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.