சென்னையிலிருந்து 5 இளைஞர் 2 இளம் பெண்கள் சொகுசு காரில் சுற்றுலா புறப்பட்டனர். புதுச்சேரியை சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூருக்கு வந்துள்ளன. ஐந்து வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சொகுசு காரில் 4 வீல் டிரைவ் வசதி உள்ளதாம். பேறு, மணல் மற்றும் கடினமான சாலைகளுக்கு இலுவை மற்றும் கட்டுப்பாட்டை வழங்கும் மேம்பாட்டுக்கு பெயர்தான் 4 வீல் டிரைவ் வசதி. இன்ஜினை சீராக்கி நான்கு சக்கரத்துக்கும் ஒரே நேரத்தில் இயக்கும் முறையை மேம்படுத்துமாம்.
ஐந்து வாலிபர்களின் மற்றும் இரண்டு இளம் பெண்களும் கடலூர் துறைமுகம் அருகே சொத்திக்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்று கடற்கரை மணல் அலைக்கு மத்தியில் காரில் சென்று உள்ளனர். சரியாக இரவு 12 மணி இருக்கும். கடலில் விழுந்த ராட்சத அலைகள் சொகுசு கார்ரை கடலுக்குள் சிறிது தூரம் காரை இழுத்து சென்றுள்ளது. என்ன செய்வதென்று அறியாமல் அனைவரும் திகைத்துப் போயிருந்தனர். ஒருவர் மட்டும் காரை இயக்கி பார்த்து உள்ளார் எதுவும் நடக்காததால் காரை கடலுக்குள்ளேயே விட்டுவிட்டு வெளியேறினார். பின்பு அடுத்த நாள் மீனவர்களின் உதவியுடன் கட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தனர். உப்பு தண்ணீரில் ஊறியதால் காரை இயக்க முடியவில்லை. இத்தகவல் தெரிந்து வந்த போலீசார் ஏழு பேரையும் விசாரித்தனர். கடலுக்குள் கார் சிக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல்.
