ஆபீஸ் போற டைம்ல இப்படியா நடக்கணும்?… ஓடும் ரயிலில் சிக்கிய பெண்… அடையாளம் தெரியாமல் திணறும் போலீஸ்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

மும்பை விரார் ரயில் நிலையம் அருகே உள்ள நாரங்கி ரயில்வே கிராசிங் பகுதியில் வியாழக்கிழமை காலை சுமார் 9:30 மணியளவில் பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. வல்சாத் – மும்பை அதிவேக பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் தீவிரம் காரணமாக ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக வல்சாத் எக்ஸ்பிரஸ் ரயில் நீண்ட நேரம் தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மும்பை நோக்கிச் செல்லும் ரயில் போக்குவரத்து, குறிப்பாக காலை நேரப் பணி நேரங்களில் (Peak Hours) கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சர்ச்கேட் நோக்கிச் செல்லும் உள்ளூர் ரயில்கள் (Local trains) மற்றும் தூரப் பகுதிக்குச் செல்லும் பிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த நிலையில், போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.