“புது ரேஷன் கார்டு வாங்கணுமா..? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு… உடனே இத பண்ணுங்க…!”

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை எளிதில் நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஜூலை மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் பொதுவாக மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது சனிக்கிழமைகளில், தாலுகா வாரியாக உள்ள அரசு அலுவலகங்களில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 01:00 மணி வரை நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும், முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியலையும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, இதுவரை குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், குடும்பத்தில் புதிதாகத் திருமணமானவர்கள் அல்லது குழந்தைகளின் பெயர்களைச் சேர்க்கவும், காலமானவர்களின் பெயர்களை நீக்கவும், வீட்டு முகவரி மற்றும் நியாயவிலைக் கடையை மாற்றவும், குடும்பத் தலைவரின் படம், பெயர், வயது, மொபைல் எண் போன்றவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தவும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரவும் இந்த முகாம்களில் விண்ணப்பிக்க முடியும்.

   

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக இந்த முகாமிற்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் தற்போதைய ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் அடையாள ஆவணங்கள், பெயர் சேர்க்க விரும்பினால் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் புதுமணத் தம்பதிகள் எனில் அவர்களின் திருமணப் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ரேஷன் கார்டில் மாற்றங்கள் செய்யக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.