தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் தன்னுடைய நடிப்பாலும் உயரமான உடல் அமைப்பாலும் வில்லனாக கலக்கி வந்தார். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் தனுஷிற்கு சிறுவயதிலேயே தசை சிதைவு நோய் பாதிப்பு இருந்ததால் சினிமாவை விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக மூத்த மகன் தனுஷுக்கு அக்ஷயா என்ற பெண்ணோடு ஜப்பானில் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் வீடியோ ஒன்று வெளியாகிய சர்ச்சையை கிளப்பியது .படுக்கையில் எலும்பும் தோலுமாக இருந்தார். மனைவி அக்ஷயாவையும் காணவில்லை என்று பல வதந்திகளை கிளப்பி வந்தார்கள்.
தற்போது இதற்கு பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார் நெப்போலியன். திருமணம் முடிந்த நிலையில் பல நாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டதால் கடல் பயணமாக சுற்றுலா சென்றுள்ளார்கள். திருமணமாகி சுமார் 10 மாதங்கள் முடிந்த நிலையில் முதல் முறையாக அக்ஷயா நெப்போலியன் வீட்டிற்கு வந்துள்ளார். தன்னுடைய மருமகள் வீட்டிற்கு வந்ததை நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றுள்ளார். அனைவரும் மலர் தூவி வரவேற்றுள்ளார்கள். இந்த வீடியோவை நெப்போலியன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…