nayanthara

தனுஷ் பணத்தை Waste பண்ணாங்க… நயன்தாராவை எதிர்த்து குரல் எழுப்பிய நானும் ரவுடி தான் பட உதவி இயக்குனர்…

By admin on கார்த்திகை 17, 2024

Spread the love

நயன்தாரா தனுஷ் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இதுவே பேச்சு பொருளாக இருக்கிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படம் நானும் ரௌடி தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

   

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வைபவம் மற்றும் காதல் கதையை டாக்குமெண்டரியாக Netflix இல் வெளியிடுவதாக அறிவித்து இருந்தனர். அந்த டாக்குமெண்டரியில் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நானும் ரவுடிதான் படத்தில் உள்ள காட்சிகளையும் பாடல்களையும் பயன்படுத்துவதற்காக எல் ஓ சி சர்டிபிகேட் தனுஷ் இடம் கேட்டிருக்கின்றனர்.

   

கடந்த இரண்டு வருடமாக என்சி சர்டிபிகேட் கேட்டும் தனுஷ் தாமதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. ஆனால் தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்பது போல தற்போது ஒவ்வொருத்தராக வெளியே வந்து நயன்தாராவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்னொரு உதவி இயக்குனரும் குரல் கொடுத்திருக்கிறார்.

 

அது யார் எவர் என்று தெரியவில்லை. பெயர் சொல்ல விரும்பாமல் மொட்டையாக பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நானும் ரவுடிதான் படத்தில் நான் அசிஸ்டன்ட்டாக பணியாற்றினேன். தனுஷ் அவர்களின் பணத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தேவை இல்லாமல் நிறைய வேஸ்ட் செய்தார்கள். பட டிஸ்கஷன் என்ற பெயரில் பர்சனல் ட்ரிப்ஸ் போவது என அவருடைய பணத்தை வீணடித்தார்கள். தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்பது போல அவர் பதிவிட்டு இருந்தார். ஆரம்பத்தில் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த பலரும் தற்போது அவருக்கு எதிராக பேச ஆரம்பித்து இருக்கின்றனர்.