2024இல் அதிக சம்பளம் வாங்கக்கூடிய இந்திய நடிகர்கள்.. முதல் இடத்தில் இருப்பது யார் தெரியுமா..?

By Nanthini on கார்த்திகை 17, 2024

Spread the love

பொதுவாகவே சினிமாவில் ஒரு படத்தின் கதையை தாண்டி அதில் இருக்கும் அனைத்து விஷயங்களும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. அதாவது இசை, தொழில்நுட்பம், வசனம், பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளம் என இப்படி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் நடிகர்கள் பலரும் ஒரு படத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று விட்டால் அடுத்த படத்தில் தங்களுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். அப்படி இந்திய சினிமாவில் 2024 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 படங்களுக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெரும் பிரபாஸ்.. அடேங்கப்பா

   

பிரபாஸ்:

   

பாகுபலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் பிரபாஸ் இறுதியாக கல்கி 2898டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. இவரது குறைந்த பட்ச சம்பளம் 100 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு படத்திற்கு இவர் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Aamir Khan says "These are probably the last 10 years of my active working  life, want to support writers, directors, and creative people"

அமீர்கான்:

பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிப்பு நாயகன் என அனைவராலும் கொண்டாடப்படும் அமீர்கான் படங்கள் சமீப காலமாகவே சரியாக ஓடுவது இல்லை. அது மட்டுமல்லாமல் முன்பு இருந்த அளவுக்கு அவர் ஆக்டிவாக படங்களிலும் அதிகம் நடிப்பது கிடையாது என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இன்னும் சில வருடங்களில் தான் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் இவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது ஒரு படத்திற்கு 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.

ரஜினி 170' படத் தலைப்பு 'வேட்டையன்' - டைட்டில் டீசர் எப்படி? | rajini  starrer Vettaiyan movie teaser released - hindutamil.in

ரஜினிகாந்த்:

ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக இவருடைய நடிப்பில் கூலி திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படியான நிலையில் ரஜினி ஒரு படத்திற்கு 125 கோடி குறைந்தபட்ச சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது ஒரு படத்திற்கு 270 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த ஷாருக்கான்.. அவருக்கு என்ன பிரச்சனை தெரியுமா?  | Bollywood Star Shahrukh Khan went to America for eye treatment - Tamil  Filmibeat

ஷாருக்கான்:

பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் கடந்த வருடம் ஜவான் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஷாருக்கான் 250 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு - காரணம் என்ன? - தமிழ்நாடு

விஜய்:

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக தனது கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய கடைசி படத்திற்கு விஜய் 275 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இவர் குறைந்தபட்ச சம்பளம் 130 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம் -  லங்காசிறி நியூஸ்

அல்லு அர்ஜுன்:

அதிக சம்பளம் பெற்ற நடிகராக விஜய் இருந்த நிலையில் அவருடைய சாதனையை முறியடிக்கும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதாவது தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்தப் படத்திற்கு இவர் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதலிடத்தை பிடித்துள்ளார்.