அரசியலில் திடீர் திருப்பம்..! காங்கிரஸ் +தவெக +விசிக கூட்டணி உறுதியானது… ஒரே போடாக போட்ட நாஞ்சில் சம்பத்…!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்துடன் யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். தவெகவுடன் காங்கிரஸ் இணைவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும், விரைவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) இந்த கூட்டணியில் இணையும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

விஜய் ஒரு பெரும் ஆட்படையைத் திரட்டிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியான திமுக திணறி வருவதாகவும் விமர்சித்தார். தவெகவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்வரும் தேர்தலில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

   

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் காய்களை நகர்த்தி வருவதாகவும், தவெகவின் இந்த வலுவான கூட்டணி திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் நாஞ்சில் சம்பத் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.