திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அண்மை காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்திருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்துள்ளார்.
இந்நிலையில் ஆறு ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் தான் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த போது, நான் உங்களுடைய ஃபேன் என விஜய் சொன்னதும் மெய் சிலிர்த்துப் போனதாக நெகிழ்ந்துள்ளார். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் தனக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அறிவுத் திருவிழாவில் தன்னை நிராகரித்ததாகவும் திமுகவில் தன்னை வசை பாடியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
