தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் விஜய் தங்கல் கட்சியில் இணைத்து விட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதனைத் தவிர இதர கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் விஜய்க்கு பலரும் தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் அழைத்தால் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்காக பேச செல்வேன் என்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதிமுகவை விட தமிழக வெற்றிக்கழகம் வலிமையாக உள்ளது. இதனால் பல தொகுதிகளில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவும் என்று கூறிய அவர், களநிலவரம் அப்படிதான் இருக்கிறது என்றார். மேலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிராக பேச மாட்டேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
