தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இன்று காலை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர்,தென்காசி, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் காலை முதல் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஒருசில இடங்களில் மழை பெய்தும் வருகிறது. இதன் காரணமாக இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
