BREAKING: காலையிலேயே ஷாக்… நல்லகண்ணு உடல்நிலை பின்னடைவு….!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒன்றரை மாத சிகிச்சைக்கு பிறகு கடந்த வாரம் நல்லகண்ணு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்ததால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.