பெற்றோர்களே உஷார்..! விஜய் தோற்றால் இளைஞர்கள் எடுக்கும் ஆபத்தான முடிவு..? நக்கீரன் கோபால் அதிரடி எச்சரிக்கை..!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நக்கீரன் கோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை தேர்தலில் விஜய் தோல்வியடைந்தால், அவர் தான் முதல்வர் என்ற கனவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற்றமடைந்து தவறான முடிவுகளை எடுக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

முன்பு ‘புளூ வேல்’ விளையாட்டினால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனரோ, அதே போன்றதொரு பாதிப்பு விஜய்யின் அரசியல் நகர்வுகளால் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.