தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது ‘ரீல்ஸ்’ ஆட்சி மட்டுமே நடைபெற்று வருவதாகவும், நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளே விமர்சிக்கும் அளவிற்குத் தற்போதைய ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது வெறும் 5, 6 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்த நடிகர் விஜய், தற்போது மதுராந்தகத்தில் 39 இடங்களில் பேசவிருப்பது தமிழக அரசியல் களம் மாறிவருவதையும், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியையும் தெளிவாக உணர்த்துகிறது என்றார். மக்கள் இந்த இடைத்தேர்தல் மூலம் தங்களின் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்தி, அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…