“இதுதானா மாற்றத்துக்கான ஆட்சி?”.. ! 15 நாளில் நடந்த 266 சம்பவங்கள்… புள்ளிவிவரத்தோடு முதலமைச்சர் விஜய்யை ஓப்பனாக கிழித்து தொங்கவிட்ட நயினார் நாகேந்திரன்..!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராகச் சட்டம் – ஒழுங்கு விவகாரத்தைக் கையில் எடுத்துப் பாரதிய ஜனதா கட்சி கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூய அரசியல்” மற்றும் மாற்றத்திற்கான ஆட்சி என்ற வாக்குறுதியுடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் 15 நாட்களிலேயே மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, இந்த குறுகிய காலத்திற்குள் தமிழகம் முழுவதும் 266 முக்கியக் குற்றச்சம்பவங்கள் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையின்படி, கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 45 படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 66 குற்றங்கள், 74 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 82 ஊழல் குற்றங்கள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாகக் கடந்த இரு தினங்களில் மட்டும் திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி, கோவையில் 10 வயது சிறுமி, விழுப்புரம் வண்டிபாளையத்தில் 11 வயது சிறுமி, மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் நாகையில் 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூரமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்ற பட்டியலை அடுக்கி, “இதுதானா நீங்கள் சொன்ன மாற்றத்துக்கான ஆட்சி?” என்று முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை ஒரு தூய சக்தி என்றும், மற்ற கட்சியினரைத் தீய சக்தி என்றும் பிரசாரம் செய்த விஜய், இறுதியில் தான் விமர்சித்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார் என்று நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். அதுமட்டுமன்றி, சட்டசபையில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக அரசியல் புரோக்கர்களைப் பயன்படுத்தி, அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களைத் திருட்டுத்தனமாகக் குதிரை பேரம் பேசி இழுத்துள்ளதாகவும், இந்த ஜனநாயக விரோதச் செயல் விஜய் அரசின் ஆரம்பக்கால அவலட்சணத்தைக் காட்டுவதாகவும் அவர் தனது அறிக்கையில் கடுமையாக விமரிசித்துள்ளார்.

   

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தங்களது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக் கொண்டதன் மூலம் அந்தத் தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்களின் பல கோடி வரிப்பணம் வீணடிக்கப்படுவதை முதல்வர் விஜய் உணராமல் இருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து, தொடர் பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வரும் வேளையில், இதற்கெல்லாம் முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பா.ஜ.க. எழுப்பியுள்ள இந்த கேள்விகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.