தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுக மற்றும் விஜய்யையும் தங்கள் கூட்டணி பக்கம் இழுத்து பாஜக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டும் எண்ணத்தில் பாஜக தலைமை செயல் பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என திமுகவினரால் சத்தியம் செய்ய முடியுமா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் கவர்னருடன் தான் போராடுகிறது என உதயநிதி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், ஆர்என் ரவியை விமர்சிப்பதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது என்றும் காட்டமாக கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார். கவர்னர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்க்காதே எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
