2026 ஆம் ஆண்டின் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக கட்சியின் வேட்பாளரான திருமாவளவன் எம்.ஜி.ஆரை கொச்சையாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதைக் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களால்தான் சத்துணவு தொடங்கி சமூகநீதி சட்டங்கள் வரை தலைவராலே தொடங்கப்பட்டது. திமுக தரும் தொகுதிக்காக புரட்சித் தலைவரையே அவமானப்படுத்தி பேசிய திருமாவளவனுக்கு. நான் கூறுவது மறைந்த தலைவரை குறித்து அவமானப்படுத்திப் பேசும் கீழ்க்கட்சியினரா நீங்கள்.
புரட்சித் தலைவரை பேசியது நம் தமிழகத்தையே அவமானப்படுத்தியதற்கு சமம் என்று திமுக விரைவில் உணர்வார்கள். அன்று திமுக வெற்றிக்கு புரட்சித்தலைவரின் பணியே மிகுந்த காரணமாகும். அவரைப் பற்றி பேரறிஞர் அண்ணா கூட ‘இதயக்கனி’ என்ற பெயரை சூட்டி அழைத்து வந்தார். அதேபோல் அதிமுகவை துவக்கிய பிறகு கருணாநிதி தலைவரான திமுக வின் நிழலைக்கூட நெருங்கவில்லை. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட இலங்கை பயணத்தின் போது எம்.ஜி.ஆரை பற்றி பேசியிருந்தார்.
எம்.ஜி. ஆர் என்கிற தேசிய தலைவரை நீங்கள்தான் எங்களுக்கு கொடுத்தீர்கள் என்று பெருமையோடு கூறி இருந்தார். ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற அவருடைய வழிகளையே பின்பற்றுவோம் என்று தமிழகத்தில் பேசியிருந்தார். சென்னை ரயில் நிலையத்திற்கு கூட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தியிருந்தார். பொதுவெளியில் ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசுவது தவறு என்று விரைவில் திருமாவளவன் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். ஒரே சமூகம் என்றால் ஒரு மாதிரியாகவும், வேறு சமூகம் என்றால் ஒரு மாதிரியாகவும் பேசும் திருமாவளவன.
இந்திய அளவில் அனைத்து தலைவர்களாலும் போற்றப்பட்ட , அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டவர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை கேவலப்படுத்தி பேசியது. திமுகவின் அழிவு தொடங்கி விட்டது, இதுவே அதிமுகவின் வெற்றி பயணத்திற்கு தொடக்க புள்ளியாக ஆரம்பித்திருக்கிறது. மறைந்து இத்தனை காலத்திற்குப் பிறகும் புரட்சித் தலைவரை பார்த்து பயப்படும் இவர்கள் விரைவில் கூட்டணி மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என தோன்றுகிறது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்..
