காலையிலயே சோகம்… சாலையோர பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி… 20 பேர் படுகாயம்…!

By Srimathi on ஆவணி 10, 2025

Spread the love

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவின், நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு 50 பேர் கொண்ட பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் உள்ள அனைவரும், உறவினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், ககமேகா நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினபர். மேலும் காயம் அடைந்த 20 பேரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் பலியானோருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்தார்.