மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை. தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது.இருப்பினும் அடுத்தடுத்து திரைப்படங்கள் இவருக்கு சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். இருப்பினும் தனது கையில் அரை டிசைன் படங்களை வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
கடந்த காலங்களில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த பல செய்திகள் வெளியாகி வந்தது. அதற்கு கீர்த்தி சுரேஷ் நான் இது போன்ற வதந்திகளுக்கு பதில் சொல்வதையே நிறுத்தி விட்டேன்.இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட கால காதலரான மற்றும் தனது குழந்தைப் பருவ நண்பரான துபாயை சேர்ந்த ஆண்டனி என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் இவர் baby john என்ற படத்தில் வருண் தவணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மட்டக்க என்ற பாடலுக்கு செம கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் திருமணம் செய்யும் நேரத்தில் இவ்வளவு கவர்ச்சியா? என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.