குஷ்பூ மகாராஷ்டிரா மாநிலம் பம்பாயில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நக்கத் தான் என்பதாகும். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். 1980களின் இறுதியிலும் 90களிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக வளர்ந்து வந்தவர் குஷ்பூ. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர்.

குஷ்பூ கிட்டத்தட்ட 185 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் குஷ்பூ. தனது நடிப்பிற்காக மூன்று தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், இரண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, ஒரு கலைமாமணி விருது, கேரள மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றிருக்கிறார் குஷ்பூ. 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பூ. அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார் குஷ்பூ.

ரிக்ஷா மாமா, சின்னத்தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை, மைக்கேல் மதன காமராஜன், அண்ணாமலை, சிங்காரவேலன் ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கதவை ஆகும். இவர் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார் அரசியல்வாதியாகவும் பணியாற்றி இருக்கிறார் குஷ்பூ. சமீபத்தில் ஒரு, நேர்காணலில் கலந்து கொண்ட அவரிடம் கேரவன் இல்லாத காலகட்டத்தில் நீங்கள் எப்படி நடித்தீர்கள் என்று கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, பதிலளித்த குஷ்பூ, நம்பிக்கை இருந்தது. அப்போ யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்கன்னு அந்த நம்பிக்கை. அம்பாசிடர் கார்குள்ள இருந்துதான் டிரெஸ் மாத்திக்குவோம். சுத்தி துணியை பிடிச்சிக்குவாங்க அதுக்குள்ள நின்னு துணி மாத்திக்குவோம். யாரும் பாக்க மாட்டாங்கன்னு தெரியும். அந்த காலகட்டத்துல மொபைல் கிடையாது. யாரும் போட்டோ எடுக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியம் என்று பேசியுள்ளார்.
