நாகேஷூக்கு சிகரெட் வாங்கித் தர மறுத்த AVM நிறுவனம்.. பழிவாங்க பெரிய சம்பவம் செய்த நாகேஷ்..

By admin on தை 2, 2024

Spread the love

நடிகர் நாகேஷ் மிக திறமையான ஒரு நடிகர். சிறந்த கலைஞர். உலக நாயகன் என பாராட்டப்படும் நடிகர் கமல்ஹாசனே எனக்கு நடிப்பில் இரண்டு குருமார்கள் இருக்கின்றனர். ஒருவர் சிவாஜி கணேசன், மற்றொருவர் நாகேஷ் என்று குறிப்பிடுவார். மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, நம்மவர் போன்ற தனது படங்களில் நாகேஷை நடிக்க வைத்து ரசித்தவர் கமல்ஹாசன். அப்படிப்பட்ட சிறந்த கலைஞரான நாகேஷ் மதுப்பழக்கம் உள்ளவர். செயின் ஸ்மோக்கர். அவரால் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியாது. எம்ஜிஆர், சிவாஜி படப்பிடிப்பு தளத்தில் கூட, இடைவேளை நேரங்களில் வெளியே போய் அடிக்கடி புகைத்துவிட்டு வருவார் நாகேஷ். அவரால் சிகரெட் புகைக்காமல் இருக்க முடியாது என்பதால் எம்ஜிஆர், சிவாஜியும் பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

   

இந்நிலையில், நாகேஷ் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடி ஒரு முடிவெடுக்கின்றனர். இனிமேல் படப்பிடிப்பு தளங்களில் சிகரட் போன்ற அவசியமற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இனிமேல் ஷூட்டிங் நடக்கும்போது நடிகர்களுக்கு சிகரெட் வாங்கித் தரக்கூடாது என புதுக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

   

 

இது உடனே நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. அடுத்த நாள் நாகேஷ் வழக்கம்போல் ஷூட்டிங் வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் தனது உதவியாளரை அழைத்து சிகரெட் கொண்டு வாப்பா என்கிறார். இல்லை. தயாரிப்பாளர் சிகரெட் வாங்கித் தர மறுக்கிறார். புதுக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது என, தெரிவித்துள்ளார். அப்படியா என அமைதியாக கேட்டுக்கொண்ட நாகேஷ் எதுவும் பேசவில்லை.

அடுத்து படப்பிடிப்பு தளத்தில் அனைத்து நடிகர்களும் வந்துவிட டைரக்டர் படம்பிடிக்க தயாராகி விட்டார். ஆனால் நாகேஷை காணவில்லை. படப்பிடிப்பு தளம் முழுக்க தேடியும் அவர் அங்கு இல்லை. சுமார் 2 மணி நேரம் கழிந்த நிலையில், நாகேஷ் அங்கு வந்துள்ளார். உடனே டைரக்டர், தயாரிப்பாளர் எங்கே போய்விட்டீர்கள், 2 மணி நேரமாக உங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை என்று கோபமாக கூறியுள்ளனர். அதற்கு நாகேஷ், நான் என்ன சார் செய்யட்டும், நான் செயின் ஸ்மோக்கர். என்னால் சிகரெட் பிடிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் புதுக்கட்டுப்பாடு என சிகரெட் தர மறுத்துவிட்டனர். அதனால் டாக்ஸி ஒன்றை பிடித்துக்கொண்டு போய் சிகரெட் வாங்கினேன்.

ஆனால் அப்புறம்தான் டாக்ஸி வாடகை தர கையில் பணமில்லை என தெரிந்தது. பிறகு டாக்ஸியில் வீட்டுக்குச் சென்று பணத்தை எடுத்து கொடுத்து விட்டு வருகிறேன். அதுதான் தாமதம் என்று கூலாக கூறியிருக்கிறார். 10 ரூபாய் சிகரெட் செலவை கட்டுப்படுத்த நினைத்து, 2 மணி நேரமாக ஷூட்டிங் நடக்காததால் 10 ஆயிரம் வீணாகி விட்டதே எனக்கூறி, உடனே தயாரிப்பாளர் அந்த கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறார். அவர்தான் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஏவிஎம் மெய்யப்பன். அவ்வளவு பெரிய தயாரிப்பாளருக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் நடிகர் நாகேஷ்.