Categories: சினிமா

“நான் பெரிய நடிகர் எனப் பயப்படாதே”.. என உத்வேகப்படுத்திய சிவாஜிக்கு நாகேஷ் சொன்ன பதில்… தன்னம்பிக்கையின் உச்சம் இதுதான்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

அதன் பின்னர் தன்னுடைய மார்க்கெட் போனபோதும், குணச்சித்திர மற்றும் வில்லன் நடிப்புக்கு இறங்கிவந்தார். ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்காமல் போராடினார். ஸ்ரீதர் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் அவருக்கான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சிவாஜி எம் ஜி ஆர் படங்களின் ஆதர்ச காமடியன் ஆனார் நாகேஷ்.

சிவாஜியோடு நாகேஷ் இணைந்து நடித்த முதல் படம் ‘நான் வணங்கும் தெய்வம்’. அந்த படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, நாகேஷை அழைத்துச் சென்று சிவாஜியிடம் ‘இவர்தான் நாகேஷ், நம் படத்தில் நடிக்கிறார். நாடகங்களில் நடித்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். நாகேஷின் ஒல்லியான உருவத் தோற்றத்தைப் பார்த்த சிவாஜி அவரிடம் ‘நான் ஒரு புதுநடிகராச்சே…இவ்வளவு பெரிய நடிகரோடு எப்படி நடிக்கப்போகிறோம் என்று நினைச்சி நடிப்பைக் கோட்டை விட்டுடாதே” என்று சொல்லியிருக்கிறார். நாகேஷுக்கு நம்பிக்கையைக் கொடுக்கதான் சிவாஜி அவ்வாறு சொல்லியுள்ளார்.

ஆனால் நாகேஷ்தான் தன் நடிப்பின் மேல் அளவில்லாத நம்பிக்கை உடையவர் ஆயிற்றே. அதுமட்டுமில்லாமல் அவரின் நகைச்சுவை திறன் உலகறிந்தது. அதைக் கேட்ட நாகேஷ், சிவாஜியிடம் “நான் புதுப்பையன் தானே என்று நினைத்து நீங்கள் உங்கள் நடிப்பைக் கோட்டை விட்டு விடாதீர்கள்” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டு செட்டில் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியாக, சிவாஜி அவர் சொன்னதற்காக கோபித்துக்கொள்ளாமல் அவரின் தன்னம்பிக்கையை பாராட்டினாராம். இருவரும் இணைந்து அதன் பின்னர் பல படங்களில் ஒன்றாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

ஐயோ… இது என்ன கொடூரம்?… மைலார்தேவ்பள்ளியில் ஆர்கிட் பள்ளி அருகே… ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்… பதறிப்போன மக்கள்… நெஞ்சை பதறவைத்த கொலைச் சம்பவம்…!

மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்கான் பேலஸ் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கிட்…

6 minutes ago

“வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாய்ந்த கார்…” தூக்கி வீசப்பட்டு படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச்…

15 minutes ago

ஐயோ பாவம்… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

23 minutes ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

51 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

58 minutes ago