சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மாருதி சுசுகி பிரீசா கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பலமாக மோதியது.
காரின் மோதிய வேகத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் அலறியடித்தபடித் தூக்கி வீசப்பட்டனர். இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் விபத்தின் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி, தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரின் பதிவு எண்ணைக் கண்டறிந்து, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…
மும்பை காந்திவலி கிழக்கு லோகண்ட்வாலா மகாடா வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 11:33 மணியளவில் விகாஸ் குட்டே…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார் வாடி சந்திப்பு பகுதியில், கடந்த ஆகஸ்ட் 30 அன்று அதிவேகமாக வந்த…