Categories: சினிமா

சிவாஜியை திருடன் என சொல்லிவிட்டு எதையெதையோ சொல்லி சமாளித்த நாகேஷ்!… ஆனா நடிகர் திலகத்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

அப்படி ஒரு படப்பிடிப்புக்கு நாகேஷ் லேட்டாக சென்றுள்ளார். வழக்கம் போல சரியான நேரத்துக்கு வந்திருந்த சிவாஜி, நாகேஷுக்காக காத்திருந்தாராம். லேட்டாக சென்ற நாகேஷை அனைவரும் ஒரு மாதிரி பார்த்துள்ளனர். அதைப் பார்த்த நாகேஷ் குருட்டாம் போக்கில் “என்ன திருடன்(சிவாஜி) வந்துட்டானா?” என துடுக்குத் தனமான கேட்டுள்ளார். சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் சிவாஜி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது தான் சொன்ன வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை நாகேஷ் உணர்ந்துள்ளார். ஆனால் சிவாஜியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக “அண்ணன். நீங்க நடிச்ச திருடன் படம் பார்த்தேன். பிரமாதமா பண்ணிட்டீங்க. இனிமேல் நீங்க பராசக்தி சிவாஜி இல்ல, இனிமே திருடன் சிவாஜிதான்” என சொல்லி சமாளித்துள்ளார்.

நாகேஷ் சமாளிக்கிறார் என்பது தெரிந்தும் சிவாஜி, அவர் மீது கோபம் கொள்ளவில்லையாம். ஆனால் நீண்ட நாட்களுக்கு தான் அந்த வார்த்தையை சொன்னது குறித்து நாகேஷ் குற்றவுணர்வில் இருந்தாராம். தன்னுடைய நண்பர்களிடம் தன்னுடைய தவறை சொல்லி புலம்பினாராம்.

vinoth

Recent Posts

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

2 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

9 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

21 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

31 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

37 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

43 minutes ago