நடிகர் திலகம் சிவாஜி கடந்த 1952-ஆம் ஆண்டு ரிலீசான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் சிவாஜி. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அருமையாக நடித்திருந்தார். அவரது காட்சிகள் அனைத்தையும் பார்த்த சிவாஜி எந்த காட்சிகளையும் நீக்காமல் அப்படியே அனைத்தையும் படத்தில் வைத்து விடுங்கள் என கேட்டுக் கொண்டாராம்.
இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. சிவாஜியும் நாகேஷ் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஒரு காலகட்டத்தில் சிவாஜி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவாஜியும் நாகேஷ் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்கள். அந்த படத்தின் ஷூட்டிங் 9 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் வேறு ஒரு படத்தில் நடித்து முடித்துநாகேஷ் தாமதமாக 11 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார்.
வந்தவுடன் சிவாஜியை குறிப்பிட்டு இன்னும் திருடன் வரலையா என கேட்டுள்ளார். உடனே ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக இருந்த சிவாஜி மேக்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் நாகேஷ், அண்ணே திருடன் படத்தில் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். இனிமேல் நீங்க பராசக்தி சிவாஜி கிடையாது திருடன் சிவாஜி என கூறியுள்ளார்.
இதனை கேட்டதும் நாகேஷ் சமாளிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு சிவாஜி அப்படியா சரி என்ன பெருந்தன்மையாக கூறிவிட்டு அங்கிருந்து கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறார். ஒரு பெரிய நடிகரை இப்படி சொல்லி விட்டோமே என நாகேஷும் வருத்தப்பட்டுள்ளார். அந்த சமயம் நாகேஷ் கூறியதை கேட்டு சிவாஜி கோபப்பட்டிருந்தால் அந்த படத்தின் ஷூட்டிங் நின்று போயிருக்கும். இந்த தகவலை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.