Categories: சினிமா

எம். ஜி. ஆர்க்காக பாலச்சந்தரை கைவிட்ட நாகேஷ்… உச்சக்கட்ட கோபத்தில் பாலசந்தர் செய்த செயல்…

Spread the love

பழம்பெரும் நடிகர் நாகேஷ் தாராபுரத்தில் பிறந்தவர். இவரின் முழு பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் நடிகர், துணை நடிகர், நகைச்சுவை நடிகர், சிறப்பு கதாபாத்திரங்கள் என 1958 முதல் 2008 வரை 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நாகேஷ்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், விஜய், அஜித், கமல், ரஜினி என மூன்று தலைமுறைகளை சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை பெற்றவர் நாகேஷ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு நடன கலைஞராகவும் இருந்தவர்.ஆரம்பத்தில் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்த நாகேஷ் 1958 ஆம் ஆண்டு ‘மனமுள்ள மறுதாரம்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

1961 ஆம் ஆண்டு ‘தாயில்லா பிள்ளை’ படத்தில் நடித்த பின்னர் 1962 ஆம் ஆண்டு ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் நாகேஷ். 1964 ஆம் ஆண்டு ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் மூலம் புகழடைந்தார் நாகேஷ். இந்தப்படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘அவளுக்கு என்ன அழகிய முகம்’ பாடல் பெரிய அளவில் ஹிட்டானது.

1965இல் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் தருமியாக நடித்ததற்கு இன்றளவும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி ‘காதலிக்க நேரமில்லை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘திருவருட்செல்வர்’, ‘தாய் மேல் ஆணை’, ‘படகோட்டி’, ‘அன்பே வா’ என பல எண்ணிலடங்கா வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நாகேஷ். தனது எதார்த்தமான மற்றும் அபாரமான நடிப்பிற்காக நாகேஷ் அவர்கள், 1974 ஆம் ஆண்டு ‘கலைமாமணி விருது’, 1994 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது, தமிழ்நாடு மாநில தேசிய திரைப்பட விருது, 1995ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதுகளை வென்றவர்.

1960, 70, 80களில் வெளியான படங்களில் பெரும்பாலான படங்களில் நாகேஷ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்திருப்பார். அந்த காலத்தில் நாகேஷ் உச்ச நட்சத்திரமாக இருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கும் நாகேஷ்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் சிறிது காலம் பேசாமல் இருந்தனர். அந்த பிரச்சினை என்னவென்று தெரியுமா?

1972 ஆம் ஆண்டு ஜெமினிகணேசன், வாணிஸ்ரீ, மனோரமா, தேங்காய் ஸ்ரீனிவாசன் நடித்து வெளியான திரைப்படம் ‘வெள்ளிவிழா’. இப்படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு பதில் முதலில் நாகேஷ் தான் நடிக்க இருந்தாராம். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நாகேஷ் பட காட்சிகளை எடுப்பதற்காக அவரை சூட்டிங் லொகேஷனுக்கு காலையில் 9:00 மணிக்கு வரச் சொல்லி இருந்தாராம் பாலச்சந்தர். ஆனால் வெகு நேரம் ஆகியும் நாகேஷ் வரவில்லையாம். அப்போது ப்ரொடியூசரை கூப்பிட்டு நாகேஷின் ஏன் வரவில்லை என்ன பிரச்சனை என்று கேட்கும் போது, ப்ரொடியூசர் நான் அவரை கூட்டி வருவதற்கு காலையிலேயே அவங்க வீட்டுக்கு சென்றேன்.

ஆனால் நாகேஷ் எம்ஜிஆர் பட இயக்குனர் எம்ஜிஆர் படத்தில் நடிப்பதற்காக அவரை கூப்பிட வந்திருந்தார். அதை பார்த்ததும் நாகேஷ் என்னிடம் எம்ஜிஆர் பட இயக்குனர் என்னை கூப்பிட வந்திருக்கிறார் அப்படின்னு சொல்லிட்டு அந்த இயக்குனர் கூடவே காரில் ஏறி சென்று விட்டார் என்று புரொடியூசர் பாலச்சந்தரிடம் கூறியிருக்கிறார். இதை கேட்ட பாலச்சந்தர் அது எப்படி நமக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நடிக்காமல் நாகேஷ் செல்லலாம் என்று கடும் கோபமடைந்து நாகேஷ் கேரக்டரையே தூக்கி விட்டு அந்த இடத்தில் தேங்காய் சீனிவாசனை நடிக்க வைத்தாராம் பாலசந்தர்.

பின்னர் இந்த பிரச்சனையால் 3 வருட காலம் நாகேஷ் அவர்களும் பாலச்சந்தரும் பேசாமல் இருந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு பாலச்சந்தர் முன்வந்து நாகேஷிடம் பேசி அபூர்வ ராகங்கள் படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். அப்படி எம்ஜிஆர் காக பாலச்சந்தரின் படத்தையே வேண்டாம் என தூக்கி எறிந்துள்ளார் நாகேஷ்.

admin

Recent Posts

“விஜய் எனக்கு மாமனா? மச்சானா?”… அடங்காத டிடிவி தினகரன்… மன்னார்குடி எம்.எல்.ஏ போட்ட அதிரடி சவால்…!

தமிழக அரசியலில் தற்பொழுது நிலவி வரும் பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமமுக பொதுச்செயலாளர்…

2 minutes ago

“ஒரு சீட் வச்சிருக்கவங்க பண்ற அட்ராசிட்டி”.. ஷனம் ஷெட்டியின் நக்கல் பதிவு… தமிழக அரசியலில் மீண்டும் ஒரு ‘ரிசார்ட்’ பாலிடிக்ஸ்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.…

8 minutes ago

#BREAKING: “விஜய் முதல்வர் ஆக முடியாதோ?”… தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி.. பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராக வர வேண்டும் என்ற அதீத பற்று,…

15 minutes ago

அதிகாரப் பகிர்வு வெறும் ஆசையா..? தமிழக வெற்றிக் கழகத்தின் வியூகத்தை கிழித்துத் தொங்கவிட்ட திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்…

18 minutes ago

விஜய் கொடுத்த செக் மேட்… 1967-க்குப் பிறகு மாறப்போகும் தமிழக அரசியல்?… தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

20 minutes ago

“விஜய் எடுக்கும் அதிரடி முடிவு”… ஆட்சியா? அல்லது மறுதேர்தலா?… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இதுவரை கண்டிராத ஒரு அரசியல் முட்டுக்கட்டையை மாநிலத்திற்கு அளித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

23 minutes ago