விஜய் கொடுத்த செக் மேட்… 1967-க்குப் பிறகு மாறப்போகும் தமிழக அரசியல்?… தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மற்றும் காங்கிரஸ் (5) ஆகிய கட்சிகள் ஏற்கனவே தவெக-விற்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் மூலம் தவெக கூட்டணியின் பலம் 117-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் ஒரே ஒரு இடமே தேவைப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது விசிக-வின் முடிவைச் சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இதுவரை தனது இறுதி முடிவை அறிவிக்காமல் இழுபறி நீடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று காலை தனது முடிவை அறிவிப்பதாக இருந்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது மாலை 4 மணிக்குத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய விசிக-வின் வன்னியரசு, “தனிப்பட்ட வெறுப்பு யாருடனும் இல்லை, தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில், ஆளுநர் ஆட்சி அமைவதை தங்களால் ஏற்க முடியாது என்றும், மக்கள் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விசிக-வின் இந்த மௌனம் தவெக முகாமில் ஒருவிதப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

விசிக-வின் தாமதமான முடிவால், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் 2 மணிக்கு அவசர எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநரிடம் ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், விசிக ஆதரவு கிடைக்காவிட்டால் மாற்று வழிகள் என்ன என்பது குறித்தும், தொண்டர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவும் இழுபறிக்கு மத்தியிலும், சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாகக் குவிந்து வருகின்றனர். விஜய் விரைவில் தமிழக முதல்வராகப் பதவியேற்பார் என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஒருவேளை விஜய் பதவியேற்கும் பட்சத்தில், 1967-க்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு புதிய அரசியல் சக்தியின் ஆட்சி தமிழகத்தில் அமையப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை நோக்கித் தமிழக மக்கள் அனைவரும் இப்போது விசிக-வின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

“வெற்றி.. வெற்றி.. வெற்றி”…. விஜய் தான் அடுத்த முதல்வர்… ஆதரவு கடிதத்தோடு வந்த ஆதவ் அர்ஜுனா… அடுத்து சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்த ஒரு வார கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகம்…

1 minute ago

அதிமுகவில் வெடித்த உட்கட்சிப் போர்… இபிஎஸ்-க்கு எதிராக சி.வி.சண்முகம் போர்க்கொடி…. அவசர மீட்டிங்… பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், அதிமுகவிற்குள் மிகப்பெரிய உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக…

6 minutes ago

BREAKING: அதிமுக உடைகிறது?… ஒரே நாளில் தவெக-வுக்கு தாவும் 35 எம்.எல்.ஏ-க்கள்… உச்சக்கட்ட பரபரப்பு…!

அதிமுகவின் முக்கிய முகங்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது தலைமையில் சுமார் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்…

15 minutes ago

#FLASH NEWS: “ஜோசப் விஜய் எனும் நான்”… ஆளுநர் மாளிகை நோக்கி விஜய்! 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு… தமிழக அரசியலில் உச்சகட்டத் திருப்புமுனை…!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 என்ற 'மேஜிக்' எண்ணைத் தமிழக வெற்றிக் கழகம்…

21 minutes ago

தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’… விஜய்க்கு ஆதரவாக திரும்பிய அதிமுகவின் 36 எம்எல்ஏக்கள்…. களத்தில் குதித்த சி.வி.சண்முகம் அணி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக…

26 minutes ago

இது மட்டும் நடக்கலனா செத்துடுவேன்… கழுத்தை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…

31 minutes ago