சிம்பிளாக நடந்த நிச்சயம்.. பிரம்மாண்ட இடத்தில் நடைபெற இருக்கும் நாக சைதன்யா – சோபிதா திருமணம்.. எங்கு தெரியுமா..?

By Nanthini on ஆவணி 20, 2024

Spread the love

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தற்போது தயாராகி விட்டார். சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இதனைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவுடன் நெருக்கமாக இருந்து வந்த இவர் தற்போது அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

   

சமீபத்தில்  ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் நாக சைதன்யாவுக்கும் சோவிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

 

இந்நிலையில் அவர்களது திருமணம் நடைபெறும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும், திருமண தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.