இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எளிதில் முடித்து விடுகிறோம். எந்த ஒரு தேவைக்கும் வெளியில் சென்று அலையாமல் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் வந்து விட்டன. அதன்படி இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இவை இல்லாமல் எந்த ஒரு சேவையையும் பெற முடியாது.

அரசின் திட்டங்கள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் இந்த ஆவணங்கள் அவசியம் தேவைப்படுகிறது. தற்போது பான் கார்டு தேவை அதிகரிப்பால் அனைவராலும் ஆன்லைனில் பதிவுகள் செய்து எளிதில் பெற முடியாது. அவர்களின் தேவையை தீர்க்கும் வகையில் தற்போது உங்கள் வீட்டின் அருகில் உள்ள சில்லறை விற்பனை கடை அல்லது இ-சேவை மையத்திற்கு சென்று 2 மணி நேரத்தில் சுலபமாக பான் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தேவையான ஆவணங்கள்:
சில்லறை விற்பனை கடை அல்லது மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடை , மருந்து கடை ஆகிய கடைகளை பான் கார்டு பதிவிறக்கம் செய்யும் ஏஜென்சியாக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கடைகளுக்கு ஆதார் கார்டு , ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ,வாக்காளர் அடையாள அட்டை , பயன்பாட்டு பில்கள் (அதாவது குடிநீர் , மின்சாரம், கேஸ் ) ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களை எடுத்து சென்று எளிதில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
