சாய் பல்லவி கெமிஸ்ட்ரியால் ஹேப்பி மூடில் நாக சைதன்யா.. இறுதியாக கிடைத்த வெற்றி..!

By Nanthini on மாசி 8, 2025

Spread the love

நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி நடிப்பு மிக சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சாய்பல்லவி தனக்கென உரிய நடிப்பில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தன்னுடைய காதல் கதையில் ரசிகர்களை கவர்ந்து இதயத்தை தொட்டு விட்டார். சைதன்யா நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இருவருடைய நடிப்பும் படத்திற்கு வசூல் ரீதியாக பலத்தை சேர்த்து உள்ளது. இந்த திரைப்படம் நாக சைதன்யாவின் வாழ்க்கையில் சிறந்த தொடக்க வசூலை பெற்றுள்ளது.

Thandel Movie Twitter Review Naga Chaitanya And Sai Pallavi Chemistry  Resonate With Fans, DSP Music Gets Thumbs Up | Thandel Movie Review: தண்டேல்  திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம்!

   

அவருடைய வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் இது இருக்கும் என்று திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது. படக்குழு இன்னும் வசூலை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் தற்போது தண்டேல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளில் சுமார் 18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாக சைதன்யாவுக்கு தொடர்ச்சியாக நான்கு தோல்வி திரைப்படங்கள் அமைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

   

தண்டேல்-னா என்ன ஓனரா? கவனம் ஈர்க்கும் டிரெய்லர் வெளியீடு- Thandel Movie  Trailer release

 

இந்த திரைப்படம் தமிழில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஹிந்தியில், தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் சுமார் 200 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அங்கு 3.7 கோடி வசூல் செய்துள்ளது. சாய்பல்லவியுடன் நாக சைதன்யா கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதால் நாக சைதன்யா மகிழ்ச்சியில் உள்ளார்.