1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார் நடிகை நதியா..இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
நதியா முதலில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில்தான் அறிமுகமாக வேண்டியிருந்தது. அவர் நடித்த ஒரு மலையாளப் படத்தைப் பார்த்த கமல்ஹாசன், அவருக்கு தோழியாக நடித்த லிஸியை தன்னுடைய விக்ரம் படத்துக்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் விக்ரம் படத்துக்கு முன்பே நதியா தமிழில் அறிமுகமானார்.
தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதன் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார்.
அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அதன் மூலம் அம்மா நடிகையாக அதன் பிறகு பல ஆண்டுகள் கலக்கினார். அம்மா கதாபாத்திரம் மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் அவர் சில படங்களில் நடித்துள்ளார்.
நதியா ஹீரோயினாக பீக்கில் இருந்த போது அவரின் ஹேர்ஸ்டைல் பெண் ரசிகைகளால் மிகவும் கவர்ந்திழுத்தது. அவரின் வித்தியாசமான உச்சிக் கொண்டையை ரசிகைகளும் போட்டுக் கொண்டு அதற்கு நதியாக் கொண்டை என்ற பெயரையும் வைத்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த கொண்டையின் ரகசியத்தை நதியா இப்போது தன் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்படி அந்த கொண்டையைப் போடுவது என்று வீடியோவில் டெமோ காட்டியுள்ளார்.