ஞாபகம் இருக்கிறதா நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் நடிகையை?… ஹீரோயினாக அறிமுகமாகும் அவர் மகள்… எந்த படத்தில் தெரியுமா?

By vinoth on செப்டம்பர் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இதில் குஷ்பு, மீனா, வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதே போல இந்த படத்தில் ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடிகை ராணி நடித்திருந்தார். அவர் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

   

actress Rani

   

நடிகை ராணி ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். ஆனால் அந்த படம் பெரிய வெற்றி பெறாததால் அவரால் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை. அதனால் 90 களில் கவர்ச்சி நடிகையாக நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த நாட்டாமை திரைப்படம் அவருக்கு பிரபலத்தைப் பெற்றுத் தந்தது.

 

Tarnika with her debut movie crew

அதன் பின்னர் பல மலையாளப் படங்களில் நடித்த அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவரை கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். எந்த படத்தில் தெரியுமா? சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில்தான். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.