ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி பண்ணா மம்முட்டிக்கு கோவம் வந்துரும்.. சுவாரஸ்யத்தை பகிர்ந்த பாவா லட்சுமணன்..!!

By admin on புரட்டாதி 23, 2024

Spread the love

பிரபல நடிகரான மம்முட்டி தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த மௌனம் சம்மதம், அழகன் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினியுடன் இணைந்து மம்முட்டி தளபதி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மம்முட்டி ஒரு தமிழ் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

Actor Mammootty completed the shoot | படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் மம்முட்டி

   

அது பற்றி சித்ரா லட்சுமணன் உடன் இணைந்த பேட்டியில் நடிகர் பாவா லட்சுமணன் கூறியுள்ளார். பாவா லட்சுமணன் கூறியதாவது, மம்முட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஆனந்தம் படம் ரிலீஸ் ஆனது. கடந்த 2001-ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் பாவா லட்சுமணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, முக்கியமான சீன் எடுக்கும்போது லிங்குசாமி, கேமராமேன், நீங்க, அசிஸ்டன்ட் இவங்க மட்டும் தான் இருக்கணும்னு மம்முட்டி சார் சொல்லிடுவாரு.

   

Aanandham

 

லைட் செட் பண்ணிட்டா லைட் அங்கேயே தான் இருக்கும். அதனால லைட் மேன் கூட வேண்டாம் என்று சொல்லிடுவாரு. எல்லாரையும் ஷூட்டிங் ஸ்பாட்டுல இருந்து வெளியே போக சொல்லிருவாரு. அவருக்கு சைலன்ட்டா இருக்கணும். ஒரு முக்கியமான சீன் நடித்துக்கொண்டு இருக்கும் போது அங்க யாராவது கை காமிக்கிறது, கை தட்டுவது அவருக்கு டிஸ்டர்ப் ஆகும்.

Watch Anandham Full movie Online In HD | Find where to watch it online on Justdial

அந்த அளவுக்கு ரொம்ப பொறுப்பா நடிச்சிருப்பாரு. படத்துல ஒரு 40, 50 சீன் எடுக்கும்போது லிங்குசாமி மயக்கம் போட்டு விழுந்திடுவாரு. ஏன்னா அவரு ஃபேமிலில நடந்த சம்பவம் அது. அவருக்காகவே ஒரு டாக்டர் கூடவே இருப்பாங்க. ரொம்ப அருமையான டைரக்டர் லிங்குசாமி. இன்னைக்கும் எந்த சேனல்ல ஆனந்தம் படம் போட்டாலும் விரும்பி பாப்பாங்க என கூறியுள்ளார்.

கட்டை விரலை எடுத்துட்டாங்க; பொண்டாட்டி, புள்ளகுட்டி இருந்திருந்தா..." - பாவா  லட்சுமணன் வருத்தம் | Comedy Actor Bava Lakshmanan Interview about his  health condition - Vikatan