தமிழக அரசியல் இப்போதிருந்தே பரபரப்பாகத் தயாராகிவிட்டது. அரசியல் கட்சியினர் தனியாகவும் தங்கள் கூட்டணி கட்சிகளுடனும் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு விதமான அணிகள் மோதுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் தமிழகத்தின் 100% வீடுகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்க திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த வாக்கில் அதிமுகவைவிட, 1 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சியைப் பிடித்தது திமுக. எனவே இந்த முறை வெற்றியை கைப்பற்றியே தீர வேண்டுமென துரத்த ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி. அடுத்து ‘தமிழ்த் தேசியம்’ என்ற இலக்கை முன்னிறுத்திப் போராடி வருகிறார் நாதக சீமான். கூட்டணியில் சேர்ந்து 10 தொகுதிகளை வாங்கி என்ன சாதிக்கப் போகிறோம்? நாங்கள் எப்போதுமே தனித்துத்தான் நிற்போம் என்று தனது கருத்தில் உறுதியாக நிற்கிறார் சீமான்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், 32 லட்சம் வாக்குகளைநாம் தமிழர் கட்சி பெற்றதால், அக்கட்சியை இழுக்க அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் சீமான் தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் செத்து சாம்பல் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த் தவறை நான் செய்யவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…