நாகினி’ சீரியல் மற்றும் ‘கே.ஜி.எஃப்’, ‘விஸ்வாம்பரா’ போன்ற படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மௌனி ராய், கடந்த 2022-ஆம் ஆண்டு தொழிலதிபர் சூரஜ் நம்பியாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்களது 4 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்குப் பின் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் மௌனி ராய், விவாகரத்துக்குப் பிந்தைய தனது மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பின்னடைவுகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
“ஆன்மீகம் என்பது எனது தனிப்பட்ட பயணம். நான் பகவத் கீதையைப் பலமுறை ஆழமாகப் படித்துப் புரிந்து கொண்டுள்ளேன். வாழ்க்கையின் கரடுமுரடான பாதைகளையும், பிரிவின் வலியையும் கடந்து செல்ல பகவத் கீதையின் போதனைகளே எனக்குப் மிகப்பெரிய மன அமைதியையும், சுயக்கட்டுப்பாட்டையும், தெளிவையும் கொடுத்தன” என அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மௌனி ராயின் இந்த ஆன்மீகப் பயணம் அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் ஆதரவையும் பெற்று வருகிறது
