CINEMA
தனது வரிகளால் பாடலுக்கு சிறப்பு சேர்த்த நா.முத்துக்குமார்.. அவருக்கு பிடித்த பாடல்கள் என்னென்ன தெரியுமா..?
தமிழ் திரையுலகில் தனது திறமையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இவரது பாடல் வரிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தங்க மீன்கள், சைவம் ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.
இயக்குனர் சீமானின் வீரநடை என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பெற்ற பாடலுக்கு நா. முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் முற்றிய நிலையில் 41 வயதில் நா.முத்துக்குமார் உயிரிழந்தார்.
ஒருமுறை நா.முத்துக்குமார் அளித்த பழைய பேட்டியில் நீங்களே எழுதிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் எது என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நா.முத்துக்குமார் கூறியதாவது, எனக்கு பிடித்த பாடல்கள் என்னவென்றால் காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற உனக்கென நான் இருப்பேன் பாடல், 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்ற கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்ற பாடல் பிடிக்கும்.
அடுத்ததாக காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என்ற பாடல், புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற ஒரு நாளில் வாழ்க்கை இங்கே என்ற பாடல், மன்மதன் படத்தில் இடம் பெற்ற காதல் வளர்த்தேன் பாடல், வெயில் படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்ற பாடல், 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இடம் பெற்ற லட்சாவதியே என்ற பாடல், ரன் படத்தில் இடம் பெற்ற நேரடி வீதியில் தேவதை வந்தா ஆகிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் என நா.முத்துக்குமார் கூறியுள்ளார்.