ரயிலில் பார்சல்… வீட்டில் பிரியாணி அண்டா…! வசமாக சிக்கிய கொலையாளி… எக்ஸ்பிரஸ் சடல மர்மத்தின் முடிச்சு அவிழ்ந்தது…!!

Spread the love

சென்னை கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த தாம்பரத்தைச் சேர்ந்த ஹயத்துன்நிஷா என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட நிலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பெண்ணை கொலை செய்து, அவரது உடலை பிரியாணி அண்டாவில் வேகவைத்து இந்த ஈவு இரக்கமற்ற கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட பைகளில் இருந்த ஜவுளிக்கடையின் பெயரை மையமாக வைத்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு ஆணும் பெண்ணும் அந்தப் பைகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்ததன் மூலம் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டை போலீசார் அடைந்தனர். அங்கு மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோர் ஹயத்துன்நிஷாவுடன் தங்கியிருந்ததும், வீட்டின் உரிமையாளரிடம் பொய் கூறிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதும் உறுதியானது.

இந்தக் கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், தலைமறைவான அந்த வடமாநில தம்பதியை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 10 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குச் பிறகு, முக்கிய குற்றவாளியான மாணிக் உத்தின் லஸ்கரை மணிப்பூரில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தின் மூலம் ட்ரான்ஸிட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவியை தீவிரமாக தேடி வரும் போலீசார், கைதானவரிடம் நடத்தப்படும் விசாரணையில் கொலைக்கான முழு பின்னணியும் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.

Gayathri

Recent Posts

“என் மனைவியை விட்டுட்டு வர சொன்னா…” காதலியின் முகத்தை சிதைத்து…! வாலிபரின் கொடூர செயல்… பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள மெகந்திபூர் பாலாஜி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பெண் ஒருவரின் ரத்த…

13 minutes ago

“தமிழ்நாட்டின் வரலாறே மாறப்போகுது”…. செங்கோட்டையன் போட்ட வெடி… மௌனம் காக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, அதன் தலைவர் ஜோசப் விஜய்…

37 minutes ago

“2029-ல் டெல்லிக்கு ஸ்கெட்ச்?”…. விஜய் பிரதமர் வேட்பாளரா?…. பிரேமலதா கொடுத்த நறுக்குத் தெறிக்கும் பதில்… அண்ணியார் கூறிய அந்த தலையெழுத்து சீக்ரெட்….!

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி,…

44 minutes ago

“சாராயக் கடை நல்லதா, ஜல்லிக்கட்டு கெட்டதா?”…. விஜய் உடனே மன்னிப்பு கேட்கணும்… சட்டசபையில் வெளுத்து வாங்கிய அதிமுக….!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி…

53 minutes ago

ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு… ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி அபராதம்?… சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு வழக்கு….!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஐ.டி. அணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

ஐயோ போச்சு..! ஓட்டலில் சாப்பாட போனோம்… ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ்… ஆம்னி பஸ்ஸில் நடந்த பகீர் சம்பவம்…!!

திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் - ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி…

1 மணத்தியாலம் ago