ஓடும் ரயில் மீது பாட்டில் வீச்சு….!! அலறித் துடித்த பயணிகள்…. மர்ம நபர்களின் கொடூர செயல்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் மீது, வியாசர்பாடி அருகே மர்ம நபர்கள் திடீரென பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஓடும் ரயில் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் செயலால் பயணிகள் நிலைகுலைந்து போயினர். இதில் எதிர்பாராதவிதமாக மூன்று பயணிகளின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால், சக பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமான மின்சார ரயில் மீதே இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.