சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து வெளியாகும் வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தானுக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர், அங்குள்ள கடைக்காரரிடம் தனது மனைவி ஒரு இந்தியர் என்று கூறிய வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புகழ்பெற்ற வெளிநாட்டு வ்லோகரான கார்ல் ராக் (Karl Rock), பாகிஸ்தானில் உள்ள ஒரு மின்னணு சாதனக் கடைக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் சரளமாக உருது மற்றும் ஹிந்தி மொழிகளில் பேசுவதைக் கண்டு வியப்படைந்த கடைக்காரர், “உங்கள் உருது மிகவும் நன்றாக இருக்கிறது, மாஷா அல்லாஹ்! இதை எங்கு கற்றுக்கொண்டீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த கார்ல் ராக், தான் இந்தப் பேச்சுவழக்கை இந்தியாவில் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
View this post on Instagram
உரையாடலின் தொடர்ச்சியாக, கார்ல் ராக் “எனது மனைவி ஒரு இந்தியர், அவர் டெல்லியைச் சேர்ந்தவர்” என்று கூறியதும், அந்தப் பாகிஸ்தான் கடைக்காரர் ஒரு நிமிடம் திகைத்துப் போனார். பின்னர் புன்னகையுடன் “மாஷா அல்லாஹ்” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், இரு நாட்டு மக்களிடையேயும் அன்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
