தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவால் என் தாய் தற்கொலைக்கு முயன்று ICU-ல் உள்ளார்… வீட்டுப்பணிபெண்ணின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஞானவேல் ராஜா. இவருடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் இதுவரை பல வெற்றி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நான் மகான் அல்ல, மெட்ராஸ், சிறுத்தை, இறைவி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல திரைப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவிற்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

அடுத்ததாக சூர்யாவின் கங்குவா மற்றும் விக்ரமின் தங்கலான் என இரண்டு மிகப்பெரிய திரைப்படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த இரு திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் இவரும், இயக்குனர் அமீரும் ‘பருத்தி வீரன்’ பட சர்ச்சை தொடர்பாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் கே.இ.ஞானவேல் ராஜா வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் தங்க நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பெயரில் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் தினேஷ், அன்சாரி, வீட்டு பணிப்பெண் லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்து இருந்தார் ஞானவேல் ராஜா மனைவி நேஹா. இது குறித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் நகைகள் காணாமல் போன விவகாரம் குறித்து அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

241e7cfa cad3 4685 9fff 5c0903969ab2 1

இவர்களில் வீட்டு பணிப்பெண் லட்சுமி தன் மீது ‘திருடி பட்டம்’ கட்டியதால் மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் லட்சுமியின் குடும்ப உறுப்பினர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது லட்சுமி ICUவில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி மாம்பலம் காவல் நிலையத்தில் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் அவரின் மனைவி நேஹா மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் வீட்டு பணிப்பெண் லட்சுமியின் மகள் திவ்யா. இந்த வழக்கு குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.