மீனாவை வெறுத்து ஒதுக்கும் முத்து… மன்னிப்பு கேட்க செல்லும் மீனாவின் அம்மா…

By admin on ஆவணி 21, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவின் பேச்சை கேட்காமல் தம்பியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மீனாவிடம் குடித்துவிட்டு வந்த முத்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.

இரவு குடித்துவிட்டு வந்த முத்து மீனாவிடம் என் பேச்சை மீறி நீ போனது தப்பு எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நீ எதுக்கு போன அப்படின்னு கேட்டு சண்டை போடுகிறான். அதற்கு மீனா ஏங்க கல்யாணம் ஆகி வந்தாச்சுன்னா என் அம்மா தங்கச்சி தம்பியை நான் பார்க்கவே கூடாதா எனக்கு நீங்களும் என் குடும்பம் ரெண்டும் முக்கியம் என்று சொல்கிறாள். முத்து அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இனி உனக்கும் எனக்கும் எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டு போய் தூங்கி விடுகிறான். பின்னர் காலையில் எழுந்து மீனா அண்ணாமலை விஜயாவிற்கு காபி போட்டு கொடுக்கிறாள். முத்துவிற்கு காபி எடுத்துக்கொண்டு வருகிறாள் அப்போது முத்து எனக்கு டீ காபி எல்லாம் வேண்டாம் சரக்கு இருந்தா குடு அப்படின்னு சொல்லிட்டு வெளியே கிளம்பிடறான்.

   

   

கார் சவாரிக்கு போகும் இடத்திற்கு சென்ற முத்துவிடம் அவனது நண்பர் வந்து சவாரி வந்து இருக்குடா ஏன் போலையா அப்படின்னு கேட்கிறார். முத்து இல்லடா இன்னைக்கு எனக்கு மனசு சரியில்ல நான் போகல அப்படின்னு சொல்கிறான். என்னடா நீதான் இனிமே எந்த சவாரியையும் விடமாட்டேன்னு நீ தானே சொன்ன அப்படின்னு சொன்னதுக்கு இன்னைக்கு மனசு சரியில்லடா அப்படின்னு சொல்லிட்டு இருக்கிறார் முத்து. அப்போ அந்த இடத்துக்கு ஆட்டோவில் மீனாவின் அம்மாவும் தங்கை சீதாவும் வருகின்றனர்.

 

மீனாவின் அம்மாவும் சீதாவும் அங்கு வந்து மாப்பிள்ளை மீனா செஞ்சது தப்பு தான் உங்க பேச்சை மீறி வந்துட்டா இருந்தாலும் உங்க மேல பாசம் இல்லாம இல்ல இந்த ரெண்டு பிள்ளைங்களையும் சீதாவையும் சத்யாவையும் அவதான் தூக்கி வளர்த்தா அந்த பாசத்துனால தான் வந்துட்டா மாப்பிள்ளை. வேற எதுவும் இல்ல உங்கள அவமானப் படுத்தனும்னு அவன் நினைக்கல. நாங்க அவ பண்ணினதுக்காக நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறோம் மாப்பிள்ளை, நீங்களே அவ வெறுத்து ஒதுக்கிட்ட அவ எங்க போவா என்று மீனாவின் அம்மா கூறுகிறார்.

அதற்கு முத்து அப்படி எல்லாம் இல்ல அத்தை, எதுக்காக நான் அப்படி சொல்றேன் உங்க யாருக்குமே புரியல. சத்யாவோட நல்லதுக்கு தான் நான் சொல்றேன். அவன் தருதலையா ரவுடி பசங்களோட சேர்ந்து சுத்திட்டு இருக்கான். அவனை நீங்க யாருமே கண்டுக்க மாட்டேன் சொல்றீங்க செல்லம் தான் கொடுக்குறீங்க அவன் நல்லா இருக்கட்டும் நான் சொல்றது உங்க யாருக்குமே புரிய மாட்டேங்குது.

எனக்கு மரியாதை இல்லாத ஒரு இடத்தில புருஷனுக்கு மரியாதை இல்லாத இடத்தில பொண்டாட்டியா அவ எப்படி போகலாம் அது பெரிய தப்பு தான். அதை நீங்க நியாயமே படுத்தாதீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்துவிற்கு போன் வருகிறது உடனே அத்தை எனக்கு சவாரி வந்துடுச்சு நான் கிளம்புறேன் நீங்களும் கிளம்புங்கன்னு சொல்லிவிட்டு முத்து சென்று விடுகிறான். இவ்வளவு பேசியும் மாப்பிள்ளை சமாதானம் ஆகவில்லையே என்று வருத்தத்துடன் மீனாவின் அம்மாவும் சீதாவும் அங்கிருந்து செல்கின்றனர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.