Categories: சினிமா

போலீஸிடம் சிக்கி கொள்ளும் முத்து… தவிக்கும் மீனா… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினி நாடகத்தை போட்டு வீட்டில் உள்ள அனைவரையும் தன் அப்பா இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி விட்டார். முத்து இதை விடக்கூடாது ஏதோ மர்மம் இருக்கிறது கண்டுபிடிக்க வேண்டும் என்று மீனாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் ரோகினி வித்யா வீட்டிற்கு சென்று அங்கு தன் அம்மாவை வரவழைத்து அப்பாவின் போட்டோவை கொண்டு வரச் சொல்கிறார். அதை கொண்டு வந்த ரோகினியின் அம்மா எதுக்காக அப்பா போட்டோ உனக்கு என்று கேட்கும்போது நடந்தவை எல்லாம் கூறி நான் சொன்னதுல கொஞ்சமாவது உண்மை இருக்கணும்ல அப்பா போட்டோ கொண்டு போனா தான் நம்புவாங்க என்று கூறுகிறார். அப்போ வித்யா இவ ரொம்ப பொய்க்கு மேல பொய் சொல்றமா என்று கூறுகிறார்.

உடனே ரோகிணியின் அம்மா என்ன ரோகினி இப்படி பண்ணிட்டு இருக்க நீ பொய்யா சொல்லும் போது எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு. என்னைக்காவது நீ மாட்டினா அவங்க உன்ன ஏத்துக்குவாங்களா உண்மைய சொன்னாளாவது அவங்க ஏத்துக்குவாங்க என்று சொல்லும்போது வழக்கம்போல ரோகினி அவங்க அம்மாவிடம் சண்டை இட்டு உன்னால தான் என் வாழ்க்கை கெட்டுப்போச்சு இருக்க வாழ்க்கை நான் தக்க வைக்கணும் அப்படிங்கறதுக்காகதான் நான் பொய் சொல்லிட்டு இருக்கேன் என்று சண்டையிட்டு சென்று விடுகிறார்.

வீட்டிற்கு போய் அழுது கொண்டே அப்பாவின் போட்டோவை காட்டி மறுபடியும் ஒரு சீன் போடுகிறார். அதற்கு அடுத்ததாக மீனாவும் முத்துவும் செருப்பு தைக்கும் பாட்டி தாத்தாவிடம் சென்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு ட்ராபிக் போலீஸ் வந்து அவர்களின் கடையை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்று அகற்றிவிட்டு தாத்தா பாட்டியை தள்ளிவிடுகின்றனர். தனால் முத்து ட்ராபிக் போலீஸை அடிக்க சென்று விடுகிறார். பாட்டிக்கு தலையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் ஈகோவால் கோபப்பட்ட டிராபிக் போலீஸ் முத்துவை கம்பளைண்ட் செய்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் வந்தவுடன் முத்தவும் மீனாவும் நடந்தவற்றை கூறி அந்த பாட்டியை ஹாஸ்பிடல்ல இருக்காங்க என்று கூறும் போது டிராஃபிக் போலீசை கூப்பிட்டு திட்டுகிறார். அவர்கள் புகார் கொடுத்தா நீ போலீஸ் சட்டையை கழட்ட வேண்டி வரும். இப்படி கை வைக்க கூடாது ஆக்கிரமிப்பு அகற்றனும்னா அடிக்க சொல்லுச்சா என்று திட்டுகிறார். உடனே முத்துவையும் இன்ஸ்பெக்டர் திட்டுகிறார். இந்த போலீஸ் மேல தப்பு இருந்ததுனால தான் உன்ன சும்மா விடுறேன் இல்லனா உன்ன தூக்கி உள்ள வச்சிருப்பேன். போலீஸ் மேல எல்லாம் கை வைக்கிற வேலை வைக்காதே என்று அனுப்பி விடுகிறார். உடனே அந்த டிராபிக் போலீஸ் இந்த முறை தப்பிச்சிட்டேனு நினைக்கிறியா அடுத்த தடவை நீ என்கிட்ட மாட்டுவ உன்னை சும்மாவே விடமாட்டேன் என்று சவால் விடுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago