#image_title
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையினர் சார்பில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தியா என்பவர் 20 நிமிடங்கள் இடைவிடாது முருகன் பாடல்களை பாடி மாநாட்டில் இருப்பவர்களை அசர வைத்துள்ளார்.
ஒரு இடத்தில் கூட தவறு செய்யாமல் அவர் பாடிய பாடல்கள் மனதைக் கவரும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் தியா அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் மூன்று வயதில் இருந்தே பாடல் கற்றுக் கொண்டேன். எனது அம்மாவும் பாட்டியும் எனக்கு பாடல் கற்றுக் கொடுத்தார்கள். வீட்டில் தினமும் முருகன் பாடல்களை படிப்பேன்.
வடபழனி முருகன் கோவில், பழனி முருகன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் கச்சேரிகளில் நான் பாடியுள்ளேன். எனக்கு முருகன் பாடல்களை பாடி மிகவும் பிடிக்கும். மூன்று வயதில் இருந்தே எனது அம்மாவும், பாட்டியும் பாடல்களை எப்படி பாட வேண்டும் என கற்று கொடுத்தார்கள். இப்போது நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.
இன்டர்வியூல பாத்துட்டு என்னை நிறைய பேர் பாராட்டி இருக்காங்க. ஆன்மீக பாட்டு பாடறவங்களில் கே.பி சுந்தராம்பாள் அம்மா, சீர்காழி தாத்தா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இன்னைக்கு அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நான் கலந்துக்கிட்டேன் நான் பாட்டு பாடி முடிச்ச உடனே தேசமங்கையர்க்கரசி அம்மா, சுகீசியம் தாத்தா என்ன வாழ்த்துனாங்க. என் வாழ்க்கையில அது மறக்க முடியாத நிகழ்வா இருக்கும் என சிறுமி தியா பேசி உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…