13 ஆண்டுகளாக மடத்திற்கு வந்து செல்லும் முஸ்லீம் பெண்… இதுதான் காரணமா..? ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உண்மை..!!

By Soundarya on ஆடி 27, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் டவுனில் கவி சித்தேஸ்வரா மடம் உள்ளது. இந்த மடத்தின் ஆண்டு திருவிழா தெற்கின் கும்பமேளா என்று கூறப்படும் அளவிற்கு மிகப் பிரபலம். இந்த நிலையில் குடாரி மோதியில் வசிக்கும் ஹசீனா பேகம் என்ற முஸ்லிம் பெண் இந்த மடத்தில் உள்ள நாகதேவர் சிலை முன்பாக அமர்ந்து தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து வருகிறார். முதல் முறையாக முஸ்லிம் பெண் வந்தது தியானம் செய்து வருவது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “மன அமைதிக்காக இங்கு  வந்து தியானம் செய்கிறேன். 11 நாட்கள் இந்த தியானம் மேற்கொள்ள இருக்கிறேன்.

மன நிம்மதி இல்லாமல் இருந்தது .இதனால் என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். மடத்தின் சுவாமியிடம் கேட்டு தியானம் செய்து வருகிறேன் .நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அனைத்து மதங்களும் ஒன்றுதான். கடந்த 13 வருடங்களாக இந்த மடத்திற்கு வந்து செல்கிறேன். முஸ்லிம் என்பதால் என்னிடம் இந்த மடத்தில் எந்த பாகுபாடும் காட்டவில்லை. தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்வதால் என்னுடைய மனம் அமைதி பெற்று வருகிறது.    என் மனம் முழு அமைதி பெறும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.