எங்களை எதிர்த்து கேள்வி கேப்பியா?… டெல்லியில் சத்தமிட்டதை தட்டிக்கேட்ட இசைக்கலைஞர்… கொடூரமாக அடித்துக் கொலை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 9, 2026

Spread the love

டெல்லியின் கிலோக்ரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை, தனது குடியிருப்பின் வெளியே சத்தம்போட்டு மது அருந்திக் கொண்டிருந்த டெலிவரி ஊழியர்கள் மற்றும் தாபா ஊழியர்களைத் தட்டிக்கேட்ட மணிப்பூர் இசைக்கலைஞர் சி. விக்ரம் சிங் (54) அவர்கள் தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த இசைக்கலைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகளில் உறவினர்களும், இசைத்துறையைச் சேர்ந்தவர்களும் பெரும் சோகத்துடன் பங்கேற்றனர்.

   

https://twitter.com/PTI_News/status/2097613076359213354/video/1

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இசைக் கலைஞரைத் தாக்கி உயிரிழப்புக்குக் காரணமான நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.