CINEMA
என்னை Ban பண்ணிட்டாங்க.. ரூம்ல உக்காந்து அழுதுட்டே இருந்தேன்.. ஓப்பனாக பேசிய யுவன்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. முதன்முதலாக அரவிந்தன் திரைப்படம் மூலம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் 1997-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முதல் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
பிரபல இயக்குனர்களான ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் உள்ளிட்டருடன் இணைந்து யுவன் கூட்டணி அமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. முன்னணி நடிகர்களின் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்றும் பலரது விருப்ப பாடல்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தது தான். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் பள்ளி விழாவில் பேசிய யுவன் சங்கர் ராஜா கூறியதாவது, நான் ஆரம்பத்தில் இசை அமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் அனைத்துமே தோல்வி அடையும் என முத்திரை குத்தி என்னை Ban பண்ணி விட்டார்கள்.
தனி அறையில் உட்கார்ந்து கதவை பூட்டி கொண்டு அழுது இருக்கிறேன். அதன் பிறகு தான் எங்கே தவறாக நடக்கிறது என யோசித்தேன். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் இசையில் முழு கவனம் செலுத்தினர். அப்படி இசையமைத்ததால் தான் இங்கு உங்கள் முன்னால் நிற்கிறேன். பேசுற வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும். நாம் நடந்து கொண்டே தான் இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்களை வீழ்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டே தான் இருப்பார்கள்.
ஆனால் நீங்கள் அதற்கு செவி சாய்க்கவே கூடாது. தலை நிமிர்ந்தபடி அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் அப்படி இருப்பதால்தான் இந்த துறையில் இத்தனை ஆண்டுகள் என்னால் நீடிக்க முடிகிறது. ஆனால் ஒரு சில நேரம் என்னை பற்றி வரும் கருத்துக்கள் விமர்சனங்கள் அத்தனையையும் என்னால் கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. அப்படி கேட்டுக் கொண்டிருந்தால் இத்தனை ஆண்டுகள் என்னால் பயணித்திருக்க முடியாது. எதிர்மறை விஷயங்களுக்கு என் காதுகள் எப்போதும் மூடி இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டும்தான் என் காதுகள் திறந்திருக்கும் என கூறியுள்ளார்.