CINEMA
இசையால் மக்களின் மனதில் இடம் பிடித்த யுவன்.. அவரோட சொத்து மதிப்பு எவ்ளோன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிவிடுவீங்க..!!
பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்ப காலகட்டத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல்கள் பெரியளவு வரவேற்பை வரவில்லை. கடந்த 1999-ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கத்தில் ரிலீசான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது.
அதன் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் மார்க்கெட் உயர்ந்தது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களுக்கும் படத்தில் இடம்பெறும் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. ஒரு படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்க யுவன் சங்கர் ராஜா 5 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் டிகிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இசையமைப்பது மட்டுமில்லாமல் ஒய்.எஸ்.ஆர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார் யுவன் சங்கர் ராஜா. அவர் தயாரிக்கும் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த வகையிலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களுக்கு ராயல்டி அடிப்படையில் ஆண்டுக்கு சில கொடிகள் வருமானமாக கிடைக்கிறது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு 125 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா உள்ளது. அந்த பங்களாவின் கட்டளத்திற்கு மட்டும் பத்து கோடி ரூபாய்க்கு மேல் யுவன் சங்கர் ராஜா செலவு செய்துள்ளாராம். அது மட்டும் இல்லாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களும் உள்ளது பென்ஸ் GLE கிளாஸ், ஆஸ்டன் மார்ட்டின் வேன்குவிஸ், மினி கூப்பர் S உள்ளிட்ட கார்களை யுவன் சங்கர் ராஜா வைத்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி அதன் மூலமாகவும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.