தூக்கி விட்ட குருவையே அசிங்கப்படுத்திய இளையராஜா.. இசையமைப்பாளர் TMS மகள் மல்லிகா ஷாக்கிங் தகவல்..!

By Nanthini on பங்குனி 14, 2025

Spread the love

கிளாசிக் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர் ஆக பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் தான் டி எம் சௌந்தரராஜன். தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது திறமையின் மூலமாக திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய டி எம் சௌந்தர்ராஜன் எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில் அதே நடிகரை பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்றத்தில் பாடும் திறன் பெற்றவர். அதனைப் போலவே சினிமாவில் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழா! இன்னிசை கச்சேரி நடத்தும் தமிழக அரசு!  அனுமதி இலவசம்! | Playback singer TM Soundararajan centenary event - Tamil  Oneindia

   

கிளாசிக் இசையமைப்பாளர் கேவி மகாதேவன் தொடங்கி எம் எஸ் வி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டி எம் சௌந்தரராஜன் இளையராஜாவின் முதல் படமாக அன்னக்கிளி படத்தில், அதனைத் தொடர்ந்து சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்த போது அவர்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார். ஒரு கட்டத்தில் டீ எம் சௌந்தரராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காத இளையராஜா மற்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.

   

TMS Ilayaraja

 

இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விவகாரம் குறித்து டி எம் சௌந்தரராஜன் இன் மகள் மல்லிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.  அதில், இளையராஜா ஆர்மோனியம் கிட்டார் எல்லாம் வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில் கச்சேரிக்காக எங்க அப்பா கிட்ட தான் டெய்லியும் வாய்ப்பு கேட்டு வந்து நிற்பார். எங்கிட்ட அப்பா எங்கன்னு கேட்டதும் தோ வராருன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அப்பா வந்துட்டாருன்னு சொன்னதும் கேட் கிட்ட எல்லா பசங்களும் வந்து சான்ஸ் கேட்டு நிப்பாங்க. அப்படி நின்ன பையன் தான் இளையராஜா.

எங்க அப்பாவை திட்டி விட்டுட்டாரு. எங்க அப்பா இளையராஜா கிட்ட இது மாதிரி பாட்டு பண்ணா நல்லா இருக்கும் என்று சொல்லி இருக்காரு. அப்போ இளையராஜா நான் தான் மியூசிக் டைரக்டர் நான் சொல்றதுதான் எல்லோரும் கேட்கணும் என்று கோபப்பட்டு சொல்லி உள்ளார். ஓ அப்படியா சரிப்பா என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி வந்தவர் தான் என்னுடைய அப்பா. அதன் பிறகு அவர் பாடவே இல்ல. அதன் பிறகு தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக்கொள்ளவே இல்லை. பொது இடங்களில் சந்தித்துக் கொண்டால் மட்டும் மரியாதைக்கு பேசிக்கொள்வார்கள் என டி எம் எஸ் மகள் மல்லிகா பேசியுள்ளார்.